[X] Close

வேலாம்புதூர் சம்பவத்தில் காவல்துறை மெத்தனம்!

Police-lurk-in-Vellambudur-incident

விழுப்புரம் அருகே 4ஆம் வகுப்பு மாணவன் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டு அவரது சகோதரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் காவல்துறை தற்போதுதான் விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் அருகே உள்ள வேலாம்புதூர் கிராமத்தில் வசிப்பவர் ஆராயி(45). இவரது கணவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ஆராயிக்கு 4 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர். இதில் கடைசி மகள் தனம் மற்றும் மகன் தமயனுடன் ஆராயி வசித்து வந்தார். 

இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி காலை ஆராயின் மகன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீட்டில் இறந்து கிடந்தார். அருகில் ஆராயியும் அவரது மகள் தனம்(14) படுகாயத்துடன் கிடந்துள்ளனர்.இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அரகண்டநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிருக்குப் போராடிய நிலையில் இருந்த ஆராயி மற்றும் அவரது மகளை மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இறந்துப் போன தமயனின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரியில் சிறுமி தனத்திற்குச் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக உறுதிசெய்துள்ளனர்.


Advertisement

இதுதொடர்பாக ஆரம்பத்தில் சந்தேக மரணம் என்று போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பின்னர் இதைக் கொலை வழக்காக மாற்றிப் பதிந்துள்ளனர். கடந்த 22ஆம் தேதி நடந்த இச்சம்பவத்தில் காவல்துறையினர் மெத்தனமாக செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்ட போது பிரதமரின் வருகையால் வேலையாக இருந்துவிட்டதாகவும், ஆனால் உரிய விசாரணை நடத்தப்படும் எனக் கூறினார். இவ்விவகாரத்தில் தற்போதுதான் எஸ்.பி. விசாரணையை தொடங்கியுள்ளார். மேலும் 5 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் விசாரித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. 


Advertisement

Advertisement
[X] Close