திரைப்படங்களின் வன்முறை காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு சென்னை அம்பத்தூர் - கொரட்டூர் இடையே பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் மாணவர்கள் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். ஏராளமான பொதுமக்கள் பயணிக்கக்கூடிய ரயிலில் மாணவர்கள் கத்திகளுடன் நடத்திய தாக்குதல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பட்டரவாக்கம் ரயில்நிலையத்தில் இறங்கிய பதினைந்துக்கும் அதிகமான மாணவர்கள், அங்கிருந்த மற்றொரு குழுவைச் சேர்ந்த மாணவர்களை சுற்றி வளைத்து அரிவாள், கத்திகளை கொண்டு தாக்கினர். இதில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. மற்ற மாணவர்கள் தப்பியோடினர். அரிவாள் கொண்டு தாக்குதல் நடத்திய மாணவர்கள், அங்கிருந்த பயணிகளை மிரட்டத் தொடங்கினர்.பயங்கர ஆயுதங்களால் வெட்டிய மாணவர்கள் ரயிலில் ஏறிச் சென்றுவிட்டனர். சம்பவத்தில் தொடர்புடையவர்கள் பிரசிடென்சி மற்றும் பச்சையப்பாஸ் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து வீடியோ காட்சிகளைக்கொண்டு நடத்தப்பட்டவிசாரணையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி இதேபோல நெமிலிச்சேரி ரயில்நிலையத்தில் கத்திகளுடன் வந்து அனைவரையும் மிரள வைத்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட முத்துபாண்டி மற்றும் மோகன் என்ற பச்சையப்பாஸ் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது. காயம்பட்ட பிரகதீஸ்வரன், தினேஷ் மற்றும் அஜீஸ் ஆகிய 3 மாணவர்களும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்கள். அம்பத்தூர் காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணையில் ஈடுபட்ட நிலையில், மோகனை கைது செய்தனர்.
இந்நிலையில் யுவராஜ் என்பவர் "ரூட் தலையாக" செயல்பட்டு, இந்த தாக்குதலுக்கு திட்டம் திட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஹரி, யுவராஜ் இருவருமே தற்போது தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடும் பணியை ரயில்வே காவல்துறை தீவிர படுத்தியுள்ளனர், மேலும் இந்த விசாரணையில் இருந்து முத்துபாண்டி விடுவிக்கப்பட்டார் .மோகனை இன்று நீதிபதி முன் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க ரயில்வே காவல்துறை திட்டமிட்டுள்ளது
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!