[X] Close

ட்ரெண்டான ‘கடைக்குட்டி சிங்கம்’: ரேக்ளாவை மகனுடன் ரசித்த சூர்யா!

Surya-watch-Rekla-Race-with-his-Son-Dev-Kataikutty-singam

‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் சூட்டிங்க் ஸ்பாட்டில் நடிகர் சூர்யா தனது மகனுடன் ரேக்ளா ரேஸை ரசித்துள்ளார்.

‘தீரன்’ வெற்றியை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் திரைப்படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி, சாயிஷா ஆகியோர் நடிக்கின்றனர். அத்துடன் சத்யராஜ், சூரி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, இமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் கடைக்குட்டி சிங்கம் படத்தின் டைட்டில் போஸ்டரை சூர்யா வெளியிட்டுள்ளார். அதில் ‘பயிர் செய்ய விரும்பு’ என்ற வாசகம்
எழுதப்பட்டுள்ளதால், படத்தில் விவசாயப் பிரச்னைகள் குறித்து கருத்து கூறப்படலாம் என கருதப்படுகிறது. 


Advertisement

இவற்றுடன் தனது மகனுடன், ‘கடைக்குட்டி சிங்கம்’ படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ரேக்ளா பந்தயத்தை கண்டுகளித்த வீடியோவையும் அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.


Advertisement

இதற்கிடையே சென்னை அளவிலான ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #KadaiKuttySingam இடம்பிடித்துள்ளது.


Advertisement

Advertisement
[X] Close