வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் இசைஞானி இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து இந்த மூவரையும் தமிழ் சினிமாவின் தரமான கூட்டணி என்று விமர்சகர்கள் குறிப்பிடுவர். ஆனால் காலப் போக்கில் கருத்து முரண்பாட்டால் இவர்கள் இணைந்து பணியாற்றுவதை தவிர்த்துவிட்டனர். இன்றளவும் இந்தக் கூட்டணி எப்போதும் இணையும் என்ற எதிர்பார்ப்பு திரை ரசிகர்களிடையே நிலவுகிறது. கருத்து முரண்பாட்டால் முறிந்து போன உறவை மீண்டும் ஒன்றிணைத்திருக்கிறது ‘பத்ம விபூஷன்’ விருது. மத்திர அரசு இளையராஜாவுக்கு அளித்திருக்கும் இந்த விருதிற்காக வைரமுத்து தன் வாழ்த்து செய்தியை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டிருக்கும் குறிப்பில்,
பத்ம விபூஷண் விருது பெறும் இளையராஜாவை
“காற்றின் தேசம் எங்கும் - உந்தன்
கானம் சென்று தங்கும்
வாழும் லோகம் ஏழும் - உந்தன்
ராகம் சென்று ஆளும்
வாகை சூடும்” என்ற காதல் ஓவியம் வரிகளால் வாழ்த்துகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
Loading More post
'கோதுமை ஏற்றுமதி தடையை இந்தியா மறுபரிசீலனை செய்யும்' - ஐ.நா அமெரிக்க தூதர் நம்பிக்கை
பேரறிவாளன் விடுதலை மூலம் மாநில உரிமையும் நிலைநாட்டப்பட்டுள்ளது - முதல்வர் மு.க.ஸ்டாலின்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
விடுதலை ஆனார் பேரறிவாளன்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், கமலஹாசனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்