யார் என்ன பேசினாலும், என்ன நடந்தாலும் அன்பாகவே இருப்போம் என நடிகர் சூர்யா ரசிகர்கள் மத்தியில் பேசியுள்ளார்.
நடிகர் சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்தத் திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், “'தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் படப்பிடிப்பின் போது நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். இப்படத்துக்கென அனிருத் இசையில் உருவாகியுள்ள பாடல்கள், தென்னிந்தியா முழுவதும் படம் மீதான எதிர்பார்பை அதிகரித்துள்ளது. இயக்குநர் விக்னேஷ் சிவனோடு பணியாற்றிய அனுபவம் நன்றாக இருந்தது. நான் படத்தில் ஃபிரெஷாக இருப்பதாக அனைவரும் கூறுகிறார்கள் அதற்கு முழு காரணம் விக்னேஷ்தான். எனக்கு ரொம்ப நாளாக முன்பு போல் பெரும்பாக்கம் வரை சென்று சாதாரணமான ஒரு கடையில் டீ குடிக்க வேண்டும் என்ற ஆசை. அதை விக்னேஷ் சிவன் நிறைவேற்றி வைத்தார். நானும் ஒரு கம்பெனியில் மாதம் 700 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்து அதன் பின் ஒரு நடிகனாகி, கடுமையாக உழைத்துதான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன். என்னை போன்ற ஒருவனே வாழ்கையில் இவ்வளவு பெரிய இடத்தை அடைய முடியும் என்றால், கண்டிப்பாக உங்களால் இதைவிட மிகப்பெரிய உயரங்களை அடைய முடியும். இப்போது இருக்கும் சூழ்நிலையில் பல விஷயங்கள் நம்மை சுற்றி நடக்கிறது. யார் என்ன பேசினாலும், என்ன நடந்தாலும், அன்பாகவே இருப்போம் ”என ரசிகர்கள் மத்தியில் சூர்யா பேசினார்.
Loading More post
HDFC வாடிக்கையாளர்கள் கணக்கில் ரூ.13 கோடி வரவு எப்படி?- வங்கி அதிகாரிகள் விளக்கம்
தோனி, ரோகித், கோலி இல்லாத முதல் ஐபிஎல் பைனல்!
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி