Published : 03,Jan 2018 01:44 PM

சண்டக்கோழி -2ஐ கைப்பற்றிய சோனி மியூசிக்

Sony-music-Bags-the-audio-rights-of-Sandakozhi-2

சண்டக்கோழி-2 படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றியிருக்கிறது சோனி மியூசிக் நிறுவனம் 

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் விஷால், நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துவரும் படம் சண்டக்கோழி-2. 2005ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் சண்டக்கோழி. இப்படத்தின் 2ஆம் பாகத்திற்கான படப்பிடிப்புகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து படத்தின் ஆடியோ உரிமையை பிரபல சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியிருப்பதாக நடிகர் விஷால் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் சோனி மியூசிக் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் சண்டக்கோழி -2 படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றியிருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

25-வது படம் என்பதால் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலமே விஷால் தயாரித்து வருகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை வருகிற ஜனவரி 6-ஆம் தேதி மலேசியாவில் நடக்கவிருக்கும் நட்சத்திர கலை விழாவின் போது வெளியிடவும் படத்தை ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.
 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்