Published : 02,Jan 2018 07:18 AM
இறுதிச் சடங்கிற்கு ரூ.2 லட்சம் வைத்துவிட்டு வயதான தம்பதி தற்கொலை

சென்னை போரூர் பகுதியில் இறுதிச் சடங்கு செய்வதற்கான தொகையை காசோலையாக வைத்துவிட்டு வயதான தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அய்யப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்த மனோகரன், அவரது மனைவி ஜீவா ஆகிய இருவரும் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். பெற்றோருடன் வசித்து வந்த மகன் சரவணன் பழனிக்கு சென்ற நிலையில் மனோகரன், ஜீவா இருவரும் உடலில் மண்ணென்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில், எங்கள் இறுதி சடங்கிற்காக 2 லட்சம் ரூபாய் காசோலையை வைத்துள்ளோம், எங்களை எரித்து விடுங்கள் என்று குறிப்பிட்டிருந்தது. தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.