Published : 01,Jan 2018 07:28 AM

ஆண்டின் முதல் கிரிக்கெட் போட்டி: வெற்றியுடன் தொடங்கப்போவது யார்

The-first-cricket-match-of-the-year--who-will-start-with-victory

நியூசிலாந்து - மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி தற்போது நடைப்பெற்று வருகிறது. இந்த ஆண்டின் முதல் போட்டி என்பதால், இதில் எந்த அணி வெற்றி பெற போகிறது என்பதை காண இரு நாட்டு  ரசிகர்களும் ஆவலுடன் உள்ளனர். 

மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளை இழந்த மேற்கு இந்திய தீவுகள் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது. நெல்சனில் நடைப்பெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிப்பெற்றது.

இந்நிலையில் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைப்பெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 2018ஆம் ஆண்டின் முதல் போட்டி இது என்பதால் வெற்றியுடன் தொடங்க இரு அணி வீரர்களும் முனைப்பில் உள்ளனர். நியூசிலாந்து பேட்டிங், ஃபெளலிங் என பக்கா ஃபார்மில் உள்ளது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வென்ற முனைப்பில் அந்த அணி உள்ளது. முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளதால் இந்த போட்டியில் வென்றால் ஆண்டின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற பெருமையுடன் தொடரையும் கைப்பற்றும்.

மேற்கு இந்திய தீவுகள் அணி மற்ற வடிவிலான கிரிக்கெட் போட்டியில் எப்படி இருந்தாலும் டி20 போட்டிகளில் அவர்கள் சிறப்பானவர்கள். பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 பிரீமியர் லீக் போட்டிகளில் அந்த அணி வீரர்களின் பங்களிப்பு சிறப்பானதாகவே உள்ளது. அந்த அணியில் போட்டியின் முடிவை மாற்றக்கூடிய அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் உள்ளார். கடந்த மாதம் பங்களாதேஷில் நடைப்பெற்ற பிரீமியர் லீக் போட்டியின் பைனலில் 18 சிக்சர்களை அடித்து கெய்ல் சாதனை படைத்தார். புத்தாண்டு தினத்தில் அதே போன்ற ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினால் வெற்றி அவர்களுக்கே. அந்த அணியில் சிறந்த டி20 பேட்ஸ்மேன்கள் உள்ளனர். தற்போது இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி வரும் நியூசிலாந்து அணி 9ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்துள்ளது. மழையின் காரணமாக தற்போது ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்