Published : 30,Dec 2017 06:47 AM

பட்டாசு உற்பத்தியாளர்கள் 5 வது நாளாக வேலைநிறுத்தம்

Sivakasi-fireworks-units-indefinite-strike-continuous

சுற்றுப்புறச் சூழல் விதிகளிலிருந்து பட்டாசுக்கு விலக்களிக்க கோரி சிவகாசியில் பட்டாசு உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் 5 வது நாளாக நீடிக்கிறது. 

பட்டாசு வெடிப்பதால் சுற்றுப்புறச் சூழல் மாசு ஏற்படுவதாக கூறி பட்டாசு வெடிக்க இந்தியா முழுவதும் தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு அடுத்த மாதம் 5ம் தேதி விசாரணைக்கு வர உள்ள நிலையில் பட்டாசுக்கு தடை விதிக்கப்படும் அச்சத்தில் வெளி மாநில பட்டாசு விற்பனையாளர்கள் ஆர்டர்களை நிறுத்திவிட்டனர். இதனால், பட்டாசு தொழில் தானாகவே முடங்கி உள்ளது. 

இந்நிலையில் கடந்த 26 ம் தேதி முதல் பட்டாசு ஆலைகளை மூடி காலவரையற்ற நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் பட்டாசு உற்பத்தியாளர்கள். இதனால் நான்கு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ள நிலையில் பட்டாசு தொழிலை பாதுகாப்பதற்கு மத்திய அரசின் சுற்றுப்புறச் சூழல் விதிகளிலிருந்து பட்டாசுக்கு விலக்களிக்கும் வகையில் திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்