Published : 29,Dec 2017 10:36 AM
ஆப்கானிஸ்தான் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம்

ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இயங்கி வரும் ஷியா கலாச்சார மையத்தை குறி வைத்து ஐஎஸ் பயங்கரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதல் சம்பவத்தால் சுமார் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஆப்கானிஸ்தானுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் இந்தியா அறிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு இந்தியா சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.