ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேஷ் டெபாசிட் இழந்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று அபார வெற்றிபெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட 40,707 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
திமுக வேட்பாளர் மருது கணேஷ் 24,581 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்து டெபாசிட் இழந்துள்ளார். டெபாசிட் பெற மொத்தம் பதிவான 1,76,885 வாக்குகளில், ஆறில் ஒரு பங்கான 29,481 வாக்குகள் பெற வேண்டும். இந்தத் தேர்தலில் தினகரன் மற்றும் மதுசூதனனுக்கு மட்டுமே டெபாசிட் கிடைத்துள்ளது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம், பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் உள்ளிட்ட 57 பேர் டெபாசிட் இழந்துள்ளனர்.
2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட சிம்லா முத்துசோழன் 57,673 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்து இருந்தார். ஜெயலலிதா 97,218 வாக்குகள் பெற்றார். ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட போது இரண்டாம் இடம் பிடித்த திமுக, தற்போது டெபாசிட் இழந்துள்ளது. அதேபோல், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட ஏராளமான கட்சிகள் ஆதரவு அளித்த போதும் திமுக வேட்பாளருக்கு குறைவான வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!