சேலம் ஆற்றின் குட்டையில் மூழ்கி உயிரிழந்த 4 சிறுவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் 16 கண் மதகு வழியாக உபரிநீர் செல்லும் ஆற்றின் குட்டையில் மூழ்கி 4 சிறுவர்கள் உயிரிழந்தனர். இவர்கள் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கடந்த 18 ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தில் மணிகண்டன், மோகன், ராஜா, தமிழரசன் ஆகியோர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து அறிந்த போது மிகவும் துயரம் அடைந்ததாக தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். உயிரிழந்த 4 சிறுவர்களின் குடும்பங்களுக்கும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'