[X] Close

காங்கிரஸ் வெற்றியை தகர்த்ததா நோட்டா வாக்குகள்?

Gujarat-Election-Results-Did-NOTA-cost-Congress-the-state

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களித்தோர் 4வது இடத்தை பிடித்துள்ளனர்.

நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. தொடக்கம் முதலே காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இருப்பினும் பாஜக சுமார் 100 இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. தற்போது வரை பாஜக 85 இடங்களிலும், காங்கிரஸ் 71 இடங்களிலும் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில், பாஜக, காங்கிரஸ், சுயேட்சைகளுக்கு அடுத்தபடியாக யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற நோட்டாவிற்கு அதிகமானோர் வாக்களித்துள்ளனர். பதிவான மொத்த வாக்குகளில் நோட்டா 1.8 சதவீதம் அதாவது 5,18,235 வாக்குகள் பெற்று, 4வது இடத்தில் உள்ளது. இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு 49 சதவீத வாக்குகள் அதாவது 1,38,74,833 வாக்குகளும், காங்கிரஸ் கட்சிக்கு 41.4 சதவீத வாக்குகள் அதாவது 1,17,26,016 வாக்குகளும் கிடைத்துள்ளன. 3வது இடத்தில் சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளனர். இவர்கள் மொத்தமாக 4.2 சதவீதம் வாக்குகள், அதாவது 11,90,320 வாக்குகள் பெற்றுள்ளனர். 


Advertisement

குஜராத் மாநிலத்தில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளை விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது. நோட்டாவை ஒரு கட்சியாக கருதி பார்த்தால் அதற்கு பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு அடுத்தபடியாக வாக்குகள் கிடைத்துள்ளன.

        

நோட்டாவுக்கு விழுந்துள்ள 5,18,235 வாக்குகள் காங்கிரஸ் கட்சியின் வெற்றியை பல இடங்களில் பாதித்ததாக கருதப்படுகிறது. சுமார் 33 தொகுதிகளில் பாஜக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக போர்பந்தர் தொகுதியில் பாஜக வேட்பாளர் பாபுபாய் போக்ரியா 1855 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்த தொகுதியில் நோட்டாவுக்கு 3,433 வாக்குகள் கிடைத்தன. சுமார் 15 தொகுதிகளில் ஆயிரத்துக்கு குறைவான வாக்குகள் வெற்றி, தோல்வியை தீர்மானித்துள்ளது. அதாவது, பாஜக எதிர்ப்பு அலை வாக்குகள் எந்த கட்சிக்கும் கிடைக்காமல் நோட்டாவிற்கு சென்றுள்ளது. இது பாஜகவிற்கு சாதகமாக மாறிவிட்டதாக கருதப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close