[X] Close

ஹேப்பி பர்த்டே ஜி...!: ரஜினிக்கு சச்சின் வாழ்த்து

Happy-birthday-super-star-rajini-ji-Sachin-Tendulkar

நடிகர் ரஜினி காந்திற்கு இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

67-வது பிறந்தநாள் காணும் ரஜினிக்கு பல்வேறு திரைப்பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ரஜினிக்கு சச்சின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சச்சின் தனது ட்விட்டரில், “பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி ஜி. இவ்வுலகில் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் நீங்க வாழ வேண்டும்” என்று கூறியுள்ளார். ரஜினியுடன் இணைந்து எடுத்த படத்தையும் பதிவிட்டுள்ளார்.

               


Advertisement

அதேபோல், இந்திய அணியின் சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டரில், “பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா ! எங்களை மேலும் மேலும் எப்பொழுதும் மகிழ்விக்க வேண்டும்” என்று வாழ்த்தியுள்ளார். மேலும் ரஜினியின் கபாலி பட படத்தையும் பதிவிட்டுள்ளார்.

              


Advertisement

Advertisement
[X] Close