[X] Close

காங்கிரஸ் குடும்பக் கட்சி என்பது மீண்டும் நிரூபணம்: தமிழிசை தாக்கு!

Tamilisai-Soundararajan-said-about-Rahul-Gandhi-Congress-President

ராகுல் காந்தி தலைவராக தேர்வானதால் காங்கிரஸ், ஒரு குடும்பக் கட்சி என்பதை மீண்டும் நீருபித்துள்ளதாக பாஜகவின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


Advertisement

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ராகுல் காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய தமிழிசை, “காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். அது அவர்கள் கட்சியின் பிரச்னை. ஆனால் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராகியது தமிழகத்திலும், அகில இந்திய அளவிலும் இந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஏனென்றால் ஒரே குடும்பத்தை சார்ந்த மற்றொருவர்தான் கட்சியின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே மறுபடியும் குடும்ப ஆட்சி காங்கிரஸில் முன்னிறுத்தப்பட்டுள்ளது என்பதை வலிமையாக மக்களுக்கு உணர்த்துகிறது.

எத்தனையோ மூத்த தலைவர்கள் இருந்தும், அவர்களும் ராகுலை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குள் வருகிறார்கள் என்றால் இதுதான் காங்கிரஸின் ஆட்சி. இதனால் தேசத்திற்கு எந்த பலனும் இல்லை. எனவே ராகுல் தலைவரானது காங்கிரஸ் கட்சினருக்கு மட்டுமே கொண்டாட்டம், வேறு எந்த அரசியல் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மேலும் ஒரே குடும்பத்தை தவிர வேறு யாரும் கட்சியின் தலைமைக்கு வர முடியாது என்பதை காங்கிரஸில் எழுதப்படாத சட்டமாக மாற்றியுள்ளார்கள்” என்று கூறினார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close