[X] Close

இங்கிலாந்து அணிக்கு திரும்பினார் ’சர்ச்சை’ ஸ்டோக்ஸ்!

Ben-Stokes--Alex-Hales-get-call-for-England-ODI-squad

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பென் ஸ்டோக்ஸ், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இடம்பெற்றுள்ளார்.


Advertisement

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். இங்கிலாந்து கிரிக்கெட்டின் நட்சத்திர ஆட்டக்காரரான இவரைதான், ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு அந்த அணி நம்பியிருந்தது. ஆனால், லண்டன் இரவு விடுதி ஒன்றில் மதுபோதையில் ரகளை செய்த ஸ்டோக்ஸ், ஒருவரை சரமாரியாகத் தாக்கி காயப்படுத்தினார். இதையடுத்து கைது செய்யப்பட்டார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இதன் காரணமாக, ஆஷஸ் தொடருக்கான அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இந்நிலையில் ஆஷஸ் டெஸ்ட் தொடரில், இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்துள்ளது. 

இதையடுத்து ஒரு நாள் போட்டிகளுக்காக ஸ்டோக்ஸும், மதுபோதையில் தகராறு செய்தபோது அவரோடு இருந்த ஹேல்ஸும் இங்கிலாந்து அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.


Advertisement

ஒரு நாள் போட்டிக்கான 16 பேர் கொண்ட குழுவில் இருவரும் இடம்பிடித்துள்ளனர். இவர்கள் அணிக்குத் திரும்பியுள்ளதால், அணியில் இருந்து யாரை நீக்கலாம் என்கிற குழப்பம் அணி நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளது. 


Advertisement

Advertisement
[X] Close