ட்விட்டரில், இந்த வருடம் அதிகம் பேசப்பட்ட படங்களாக, ‘பாகுபலி 2’ , ‘மெர்சல்’ ஆகிய படங்கள் பதிவாகியுள்ளதாக மைக்ரோ-பிளாக்கிங் சைட் என்ற நிறுவனம் கணக்கிட்டுள்ளது.
அந்நிறுவனத்தின் கணக்கீட்டின்படி, ஒவ்வொரு வருடமும் அதிமாக டிரெண்டான விஷயங்களை சமூக வலைத்தளமான ட்விட்டர் வெளியிட்டு வருகிறது. 2017-ம் ஆண்டு பாகுபலி 2 , மெர்சல் ஆகிய படங்கள் அதிகம் பேசப்பட்டுள்ளன. #Mersal என்ற ஹேஷ்டாக்கில் மூன்றே நாளில் 1.7 மில்லியன் ட்வீட்கள் இடம்பெற்றுள்ளன என்று தெரியவந்துள்ளது.
மேலும், நடிகர் சூர்யா வெளியிட்ட, தானா சேர்ந்த கூட்டம் ( #TSK) படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் இந்த வருடம் அதிகம் ரீட்விட் (68,856 ரீ ட்விட்) செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு, முத்தலாக், ஜிஎஸ்டி, டிமானிடைசேஷன் ஆகிய விஷயங்களும் இந்த வருடம் ட்விட்டரில் அதிகமாக டிரெண்டாகியுள்ளன என்றும் அந்நிறுவனம் கணக்கிட்டுள்ளது.
விளையாட்டைப் பொறுத்தவரை, இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி அதிகப்பட்சமாக 1.8 மில்லியன் ரீடிவிட் ஆகியுள்ளதாகவும் மைக்ரோ-பிளாக்கிங் சைட் கூறுகிறது.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்