[X] Close

“கார் ஓட்டும்போது ஏன் ஹெல்மெட் அணியவில்லை?”: அபராதம் விதித்த போலீஸ்

Trichy-police-put-fine-for-driving-without-helmet

திருச்சியில் கார் ஓட்டி‌ வந்தவரின் ஆவணங்கள் சரியாக இருந்தும், ஹெல்மெட் அணியவில்லை என போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி காவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட அமல்ராஜ் இரண்டு சக்கர வாகனங்களில் பயணிக்கும் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இதனையடுத்து திருச்சி மாநகர் முழுவதும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

          


Advertisement

இந்நிலையில் திருச்சியை அடுத்துள்ள கல்லணை அருகே வேங்கூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், அவ்வழியாக காரில் வந்த சகாய ஜெயராஜ் என்பவரை நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்தனர். அவர் சீட் பெல்ட் அணிந்திருந்து, ஆவணங்கள் சரியாக இருந்த பின்பும் கூட, ஹெல்மெட் அணியவில்லை என அபராதம் விதித்துள்ளதாக தெரிகிறது. காவல் ஆணையர் அறிவுறுத்திய நடவடிக்கையை அமல்படுத்தாமல் வேண்டுமென்றே காவல்துறையினர் சிரமப்படுத்துவதாக பொதுமக்கள் வேதனை தெர‌விக்கின்றனர்.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close