Published : 29,Nov 2017 03:44 PM
ஆர்.கே.நகர் தொகுதி வாகனங்களுக்கு நாளை அடையாள அட்டை வழங்குகிறது தேர்தல் ஆணையம்

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள சென்னை ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் வாகனங்களுக்கு நாளை அடையாள அட்டை வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் 10,200 பைக்களும், 5,070 கார்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வாகனங்களுக்கு நாளை அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதனிடையே, குடியிருப்புகள், வாக்குச்சாவடி பகுதிகள் என 196 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன.
கடந்த முறை தேர்தலின்போது 50 இடங்களில் மட்டுமே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது. யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வகையில் 320 ஒப்புகைச்சீட்டு இயந்திரம் பயன்படுத்த உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.