பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ள பேட்மேன் திரைப்படம் குடியரசு தினமான ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்பத்தூர் மாவட்டத்தின் சிறிய கிராமத்தை சேர்ந்தவர் அருணாச்சலம் முருகானந்தம். இவரது வாழ்க்கையை கதையாக தொகுத்து இயக்குநர் பல்கி படம் எடுத்துள்ளார். இந்தப் படத்தில் அக்ஷய் குமார், சோனம் கபூர் மற்றும் ராதிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் பேட்மேன் படம் குடியரசு தினமான ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் என அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அந்தப் பதிவில், அனைத்து சூப்பர் ஹீரோக்கள் தொப்பியுடன் பிறப்பதில்லை; ஆனால் பேட்மேன் படம் ஒரு நிஜ சூப்பர் ஹீரோவின் கதை என்று தெரிவித்துள்ளார். இந்தக் கதையில் கதாநாயகனாக குறிப்பிடப்பட்டுள்ள அருணாச்சலம் முருகானந்தம், பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் நேப்கின் தயாரிக்கும் இயந்திரங்களை உற்பத்தி செய்து, முருகானந்தம் ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் மூலம் இந்தியா முழுமையிலுமுள்ள ஊரகப் பெண்களுக்கு விற்று வருகிறார். இவருக்கு இந்திய அரசு சார்பில் பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. பேட்மேன் திரைப்படத்திற்கு தமிழகத்திலும் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
Loading More post
'அவர் காட்டுத்தனமாக பந்துகளை எறிவார்' - பாக். பவுலர் குறித்து சேவாக் பேச்சு! யார் அவர்?
விசா முறைகேடு விவகாரம் - கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி!
அஜித்தின் ‘ஆலுமா டோலுமா‘ பாடலுக்கு மெஹந்தி விழாவில் நடனமாடிய ஆதி, நிக்கி கல்ராணி
திருமணப் பரிசாக வந்த பொம்மை வெடித்து சிதறியதில் மணமகன் படுகாயம்! பழிவாங்கல் நடவடிக்கையா?
இந்தியாவில் வெளியானது விவோ எக்ஸ்80! சிறப்பம்சங்கள் என்னென்ன?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்