[X] Close

குட்டியை காப்பாற்றியதற்காக நன்றி தெரிவித்த யானை

An-elephant-thanked-Public-for-saving-the-baby


கேரள மாநிலம் எர்ணாகுளம் குட்டம்புழா கிராமத்தில் குட்டியை காப்பாற்றியதற்காக நன்றி தெரிவித்த காட்டு யானையைக் கண்டு பொதுமக்கள் மெய் சிலிர்த்தனர்.


Advertisement

கிணற்றில் விழுந்த காட்டு யானை நீண்ட நேரத்திற்குப் பின் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட அந்த குட்டி, ஆற்றங்கரையில் நீண்ட நேரம் காத்திருந்த தனது கூட்டத்துடன் சென்றது. வனத்திற்குள் செல்வதற்கு முன் ஒரு யானை மட்டும் கூட்டத்தினரைப் பார்த்து துதிக்கையை தூக்கி பிளிறியது. அதன் பின்னர் வனப்பகுதியில் இருந்து வந்த அதே யானை மீண்டும் கூட்டத்தினரைப் பார்த்து 3 முறை துதிக்கையை தூக்கி பிளிறியது. இது அங்கிருந்த மக்களை மெய்சிலிர்க்க வைத்தது. உதவியதற்காக நன்றி தெரிவித்த யானையின் குணத்தை அப்பகுதி மக்கள் பெருமையாக பேசி வருகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close