Published : 24,Nov 2017 08:03 AM

ஆர்.கே.நகர் எம்.ஜி.ஆரின் கோட்டை; வெற்றி உறுதி! - மதுசூதனன்

RK-Nagar-MGR-Fort-Victory-Confirm--Madhusoothanan

ஆர்.கே.நகர் எம்.ஜி.ஆரின் கோட்டை எனவும், அங்கு மீண்டும் அதிமுக வேட்பாளரே வெற்றி பெறுவார் என்றும் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.

புதிய தலைமுறையிடம் பேசிய அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், “ஆர்.கே.நகர் அதிமுகவின் கோட்டை. அங்கு மீண்டும் அதிமுக வேட்பாளரே வெற்றி பெறுவார். அதிமுகவின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார். இது எம்.ஜி.ஆர். கோட்டை. எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கி 1977 பொதுத்தேர்தலில் போட்டியிட்டபோதே மக்கள் அதிமுகவுக்குதான் வாக்களித்தார்கள். அதிமுகவின் உறுப்பினர் அட்டை கூட இல்லாத டிடிவி தினகரன் அதிமுகவுக்கு உரிமை கோருவது தவறு” என மதுசூதனன் தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்