[X] Close

சோதனையை தினகரன் அரசியல் ஆக்குகிறார்: கே.பி.முனுசாமி

KP-Munusamy-about-IT-raid-and-TTV-Dinakaran

ஜெயலலிதா வீட்டில் நடைபெற்ற சோதனையை டிடிவி தினகரன் அரசியல் ஆக்க முயற்சிக்கிறார் என ஈபிஎஸ்-ஓ.பி.எஸ் அணி துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.


Advertisement

சசிகலா குடும்பத்தினர் வீடுகளை தொடர்ந்து, ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் சதியிருப்பதாக அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் தினகரன் குற்றம்சாட்டியிருந்தார். அத்துடன் ஒரு இயக்கத்தை அழித்துவிட்டு ஒரு இயக்கம் வளரலாம் என்று நினைத்தால் நிச்சயம் அவர்கள் அழிந்துபோவர்கள் என்றும், இடையூறு செய்பவர்களுக்கு நிச்சயம் காலம் தண்டனை வழங்கும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் கோவை மாவட்டம் கருங்கல்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, “ஜெயலலிதா வீட்டில் நடைபெற்ற சோதனையில் எந்த விதத்திலும் மாநில அரசு ஈடுபடவில்லை என்பது தெரியும். மத்திய அரசு ஈடுபடவில்லை என்பதும் தெரியும். இருந்தாலும் கூட தங்களை காப்பாற்றிக்கொள்வதற்காகவும், தங்களுக்கு ஒரு புதிய அரசியல் வழி எங்காவது கிடக்கிறதா என்பதற்காகவும்தான், இந்த வேதனையான சூழலைக் கூட தினகரன் அரசியல் ஆக்க முயற்சிக்கிறார். நிச்சயமாக இதில் தினகரனால் வெற்றி பெற முடியாது” என்று கூறினார்.
 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close