[X] Close

சென்னையில் தாறுமாறாக ஓடி ஆட்டோக்கள் மீது மோதிய சொகுசு கார்: ஒருவர் பலி

car-accident-in-chennai--one-dead

சென்னை டிடிகே சாலையில் நள்ளிரவில் சொகுசு கார் ஒன்று தாறுமாறாக ஓடி ஆட்டோக்களின் மீது மோதியது. இதில் ஆட்டோ ஒட்டுநர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.


Advertisement

சென்னை டிடிகே சாலையில் வழக்கம்போல் 20-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை நிறுத்திவிட்டு அதன் ஓட்டுநர்கள் அங்கு தூங்கி கொண்டிந்தனர். இந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று தாறுமாறாக ஆட்டோக்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோக்கள் நொறுங்கியதோடு அதில் தூங்கிக் கொண்டிருந்த ஓட்டுநர் ராஜேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இருப்பினும் அந்த சொகுசு காரை ஓட்டிவந்த நபர், விபத்தை ஏற்படுத்திய பின் காரை மட்டும் அங்கு நிறுத்திவிட்டு அவர் அங்கு நிற்காமல் தப்பித்துச் சென்று சென்றுவிட்டார். உயிரிழந்த ஓட்டுநர் ராஜேஷ் அரக்கோணத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.  காயமடைந்த 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து அடையாறு போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close