[X] Close

திமுக எம்.எல்.ஏ. வெற்றி பெற்றது செல்லும்: உயர்நீதிமன்றம்

Madras-High-Court-said-Cheyyur-Dmk-MLA-RT-Arasu-victory-in-2016-Election

செய்யூர் சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஆர்.டி.அரசுவின் வெற்றி செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


Advertisement

திமுக எம்.எல்.ஏ. ஆர்.டி.அரசுவின் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ஏ.முனுசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது புகாரில், “காஞ்சீபுரம் மாவட்டம், செய்யூர் சட்டசபை தனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டேன். என்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.அரசு, 304 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்த தொகுதியில் எண்ணப்பட்ட தபால் ஓட்டுகளில் பெரும் முறைகேடு நடந்துள்ளது. தபால் ஓட்டுகளை மீண்டும் எண்ணினால் நான் வெற்றி பெற வாய்ப்புள்ளது. எனவே இந்த தொகுதியில் ஆர்.டி.அரசு வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கவேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், திமுக எம்.எல்.ஏ. ஆர்.டி.அரசுவின் வெற்றி செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அதிமுக வேட்பாளர் உரிய ஆதாரங்களுடன் குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை எனக் கூறி அவரது மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close