Published : 01,Nov 2017 07:39 AM

புதுச்சேரி விடுதலை நாள் இன்று

Pudhucherry-Celebrates-Independance-Day

புதுச்சேரியின் விடுதலை நாளான‌ இன்று கடற்கரை சாலையில் நடைபெற்‌‌ற நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்து இந்தியாவிற்கு 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது. ஆனால் பிரெஞ்சுக்காரர்கள் கட்டுப்பாட்டில் இருந்த புதுச்சேரிக்கு அப்போது சுதந்திரம் கிடைக்கவில்லை. பல்வேறு பகுதிகளாக பிரிந்திருந்த இந்தியாவை பிரிட்டிஷார் ஆட்சி செய்து வந்தாலும், பிரெஞ்சு - பிரிட்டிஷார் இடையே  செய்துகொண்ட உடன்படிக்கை மூலம் சில பகுதிகள் பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. அதில் புதுச்சேரியும் அடங்கும். இந்தியா சுதந்திரம் அடைந்து ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்கு பிறகு 1954 ஆம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்களிடம் இருந்து புதுச்சேரிக்கு சுதந்திரம் கிடைத்தது. இந்த நாளை புதுச்சேரி அரசு விடுதலை நாளாக அறிவித்து கொண்டாடி வருகிறது.

இந்நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் மாணவர்களின் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் பேசிய நாராயணசாமி, புதுச்சேரியின் பழைமை வாய்ந்த புராதன வரலாற்று சின்னங்களை பாதுகாக்க 107 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்