சொகுசு கார் வாங்கிய விவகாரத்தில் நடிகை அமலாபால் வரி ஏய்ப்பு செய்யவில்லை என்று புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.
மெர்சிடிஸ் ‘எஸ்’ ரக சொகுசு கார் வாங்கியதில் அமலாபல் வரி ஏய்ப்பு செய்ததாக செய்தி வெளியானது. ஒரு கோடியே 12 லட்ச ரூபாய் மதிப்புடையது இந்த காரை சில மாதங்கள் முன்பு அவர் வாங்கியிருந்தார். அமலாபால் கேரள மாநிலத்தில் காரை பதிவு செய்திருந்தால் வரிக்கு மட்டும் 20 லட்ச ரூபாய் செலவு செய்ய வேண்டும். ஆகவே புதுச்சேரியில் பதிவு செய்திருந்தார். இதனால் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மட்டுமே அவருக்கு செலவானது. புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அங்கு பதிவுசெய்ய முடியும். வேறு மாநிலத்தவருக்கு இது பொருந்தாது என குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்ய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். அதனையடுத்து அமலாபால் கார் பதிவு செய்ததில் எந்தவித விதிமீறலும் இல்லை என்றும் புதுச்சேரியில் அவர் குடியிருப்பதற்கான வீட்டுப் பத்திரத்தை அமலாபால் தாக்கல் செய்துள்ளார் என்றும் அம்மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.
மேலும் புதிதாக கார் வாங்குபவர்கள் எங்கு வேண்டுமானாலும் பதிவு செய்து கொள்ளலாம். ஒரு வருடத்திற்குள் சொந்த மாநிலத்திற்குள் பதிவுசெய்து கொண்டால் போதும் என அமைச்சர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அமலாபால் புதுச்சேரியில் காரைப் பதிவுசெய்து வெறும் நான்கு மாதங்களே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!