[X] Close

நவம்பர் 4 வரை கனமழை தொடரும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Heavy-Rain-will-continue-till--November-4

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 4-ஆம் தேதி வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Advertisement

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் நேற்றிரவும் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலையில் ஆங்காங்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 4-ஆம் தேதி வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. தொடர் மழையால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை காரணமாக நெல்லை மாவட்டம் களக்காடு பகுதிகளில் நெல் நடவு பணிகளை விவசாயிகள்  தீவிரப்படுத்தியுள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close