[X] Close

நிரம்பும் நிலையில் குண்டேரிப்பள்ளம் அணை: வெள்ள அபாய எச்சரிக்கை!

Flood-announcement-for-Erode-Kunderippallam-Dam-around-villages

கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் அந்த அணையின் கரையோரம் உள்ள கொங்கர்பாளையம், தோப்பூர் உள்ளிட்ட பத்துக்கும் அதிகமான கிராமங்களுக்கு தண்டோரா அடித்தும், ஒலிபெருக்கிகள் மூலமும் வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் அணையிலிருந்து உபரிநீர் வெளியேறும் ஓடைகளில் இறங்கவோ, கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லவோ வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, 4 ஆண்டுகளுக்கு பிறகு குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பி வருவதால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close