[X] Close

டிஜிட்டலுக்கு வாங்க: தயாரிப்பாளர்களுக்கு விஷால் அழைப்பு

Actor-Vishal-speaks-about-Digital-platform

சந்தீப் கிஷன், மெஹ்ரின், சூரி உட்பட பலர் நடித்துள்ள படம், ’நெஞ்சில் துணிவிருந்தால்’. தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார். இதன் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. 


Advertisement

விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் பேசும்போது, ’இயக்குநர் சுசீந்திரன் படத்தின் விழாக்களில் கலந்து கொள்வது, என் சொந்த படத்தின் விழாக்களில் கலந்துகொள்வது போன்றது. இந்தப் படத்தின் ஹீரோயின் மெஹ்ரீனுடன் நான் ’தம்ப்ஸ் அப்’ விளம்பரத்தில் நடித்துள்ளேன். அவர் தமிழில் முதன் முதலாக அறிமுகமாகிறார். இந்தப் படம் அனைவரையும் அடுத்த இடத்துக்கு அழைத்து செல்லும். தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் பிளாட்பார்மில் படத்தை வெளியிடுவதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும். சாட்டிலைட் உரிமை இன்று அதிகமாக விற்பனையாவது இல்லை. அதனால் டிஜிட்டலில் இன்று படத்தை வெளியிட தயாராக உள்ள நிறுவனங்கள், தயாரிப்பாளர் சங்கத்தை அணுகி அதை பற்றிய தகவலை சேகரித்து பின் வெளியிடலாம். ’துப்பறிவாளன்’, ’மகளிர் மட்டும்’ படங்கள் டிஜிட்டலில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதை போல் தயாரிப்பாளர்கள் அனைவரும் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகி தங்கள் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை, விற்பனை செய்து லாபம் சம்பாதிக்க வேண்டும்’ என்றார்.


Advertisement

Advertisement
[X] Close