இணையதளத்தில் மெர்சல் திரைப்படத்தை பார்த்ததாகக் கூறவில்லை என்றும், மத்திய அரசின் ஜிஎஸ்டி உள்ளிட்ட சிலவற்றை விமர்சிக்கும் காட்சிகளை மட்டுமே பார்த்ததாக கூறியதாகவும் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் சங்கத் தலைவர் விஷாலின் புகாருக்கு பதிலளிக்கும் வகையில் சென்னையில் புதிய தலைமுறை செய்தியாளரிடம் இதை அவர் கூறியுள்ளார். முன்னதாக, புதிய தலைமுறையின் அக்னி பரீட்சை நிகழ்ச்சியில் பேசிய ஹெச்.ராஜா, மெர்சல் படத்தை இணையதளத்தில் பார்த்ததாகவும், படத்தை முழுமையாக பார்க்கவில்லை; சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக தகவல் வந்ததால், குறிப்பிட்ட காட்சிகளை மட்டும் பார்த்ததாகவும் கூறினார்.
இந்த பேட்டியில் ஹெச்.ராஜா கூறிய கருத்து, திரை துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான நடிகர் விஷால், அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்து எதிர்ப்பு தெரிவித்தார்.
Loading More post
'உன்னை நீ நம்பினால்' - தினேஷ் கார்த்திக் உற்சாக ட்வீட்
ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை
கோலாகலமாக நடைபெற்றது தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம்
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்