[X] Close

தலைமைச்செயலகம் செல்லும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

OPS-to-visit-secretariat-today

ராஜினாமா கடிதம் கொடுத்த பின்னர் முதன்முறையாக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தலைமைச் செயலகம் செல்ல இருக்கிறார்.


Advertisement

அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசலால் அரசு இயந்திரம் முடங்கிவிட்டதாக புகார் எழுந்தது. இந்த புகாருக்கு பதிலளித்த முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அரசு அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், தேவையான ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் கூறினார். மேலும், அரசு அலுவல்களைக் கவனிக்க தலைமைச் செயலகம் செல்ல இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதன்படி, கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் இருந்து மதியம் 12.15 மணியளவில் புறப்பட்டு முதலமைச்சர் தலைமைச்செயலகம் செல்ல இருப்பதாகத் தெரிகிறது. தலைமைச்செயலாளர், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement
Related Tags :

Advertisement

Advertisement
[X] Close