[X] Close

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்: 43 பேர் பலி

Afghanistan-taliban-attack

ஆப்கானிஸ்தான் ராணுவ முகாம் அருகே தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத்தாக்குதலில் 43 பேர் உயிரிழந்துள்ளனர். 


Advertisement

ஆப்கானிஸ்தானின் கந்தஹார் மாகாணத்திலுள்ள உள்ள ராணுவ முகாம் அருகே தாலிபான் தீவிரவாதிகள் தற்கொலைப் படைதாக்குதல் நடத்தியுள்ளனர். இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ராணுவ முகாம் அருகே நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் இதுவரை 43 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 9 ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் 6 பேரைக் காணவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்டு 10 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் ஆப்கான் ராணுவம் கூறியுள்ளது.  


Advertisement

Advertisement
[X] Close