Published : 16,Oct 2017 04:20 PM
இலங்கையில் டெங்கு காய்ச்சலுக்கு 2 பேர் பலி

இலங்கை யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரேநாளில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
இலங்கையின் யாழ் குடாநாட்டில் டெங்கு காய்ச்சால் காரணமாக பாடசாலை மாணவி உட்பட இருவர் நேற்றைய தினம் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் கலட்டி அம்மன் வீதியை சேர்ந்த மாணவி கணேசமூர்த்தி சரா. இவர் யாழ் புனித ஜோன்பொஸ்கோ வித்தியாலயத்தில் தரம் நான்கில் கல்வி கற்றுவந்தார். 9 வயதே நிரம்பிய மாணவி சரா, கடந்த 11ம் தேதி முதல் டெங்கு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோன்று இணுவிலை பகுதியை சேர்ந்த 49 வயதான மல்லிகாதேவிவும், தொடர் காய்ச்சலால் அவதிப்பட்டுவந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற காத்திருந்தபோது மயக்கமடைந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.