பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை அதிமுக அரசு பின்பற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் போதெல்லாம் அதிமுக அரசு மவுனமாக இருப்பது மட்டுமின்றி மத்திய அரசு திணிக்கும் சுமையை அப்படியே ஏழை மக்கள் மீது வைப்பதாக விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்கும் பொருட்டு அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி வரிகளை குறைத்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.
குஜராத்திலும், மஹாராஷ்டிராவிலும் வாட் வரி குறைக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், பாஜகவின் தலையாட்டி பொம்மையாக இருக்கும் தமிழக அரசு மட்டும் மக்களின் துயரங்களைப் பற்றி கவலையில்லாமல் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். ஆகையால், தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை உடனடியாக குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!