வைகை தேனி கூட்டு குடிநீர் திட்டத்தைப் பார்வையிடச் சென்ற துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து தேனி அல்லி நகரத்திற்கு கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தும் பணி நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தை ஆய்வு செய்ய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருகை புரிந்தார். ஆய்வு முடித்து வெளியே வந்த துணை முதல்வரின் காரை, அருகில் உள்ள கிராமமான குருவியம்மாள்புரம் பொதுமக்கள் தங்களுக்கு பல ஆண்டுகளாக குடிநீர் முறையாக வரவில்லை எனக்கூறி வழிமறித்து முற்றுகையிட்டனர்.
இதனால், காரில் இருந்து இறங்கிய பன்னீர்செல்வம், பொதுமக்களிடம் விரைவில் கிராமத்திற்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி கூறினார். மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம் பொதுமக்களை சமரசப்படுத்தியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். குடிநீர் திட்டத்தை ஆய்வு மேற்கொள்ள வந்த துணை முதல்வரை பொதுமக்கள் குடிநீர் கேட்டு முற்றுகையிட்டது அப்பகுதியல் பரபரப்பை ஏற்படுத்தியது.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்