[X] Close

ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை மீதான விசாரணை

Madurai-jallikattu-protest-enquiry

மதுரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை தொடர்பான விசாரணையில் பெரும்பாலானோர் காவல்துறைக்கு சாதகமாகவே சாட்சியளித்துள்ளதாக விசாரணை ஆணையர் ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டது. இதுதொடர்பாக விசாரணை ஆணையர் ராஜேஸ்வரன் மதுரையில் விசாரணை நடத்தினார். 3 நாட்கள் விசாரணை முடிந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ராஜேஸ்வரன், வன்முறை தொடர்பாக மதுரையில் 32 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் 27 பேர் விசாரணைக்கு ஆஜராகியதாக தெரிவித்தார். அதில் 25 பேர் காவல்துறைக்கு சாதகமாகவே சாட்சியளித்துள்ளதாகவும் கூறினார். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போராட்டம் திசை மாறியதால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்ததாக விசாரணைக்கு ஆஜராகியவர்கள் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close