Published : 05,Oct 2017 08:07 AM
டிசம்பரில் அனுஷ்காவுடன் திருமணமா?: என்ன சொல்கிறார் பிரபாஸ்?

பிரபாஸ் - அனுஷ்காவின் நிச்சயதார்த்தம் டிசம்பரில் நடக்க இருப்பதாக வெளியான செய்திக்கு நடிகர் பிரபாஸ் முதல்முறையாக பதில் அளித்துள்ளார்.
பாகுபலி -2 படத்தின் மூலம் உலக அளவில் புகப்பெற்ற ஜோடியாக மாறியவர்கள் பிரபாஸ் - அனுஷ்கா. இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகி வருவதாகவும், விரைவில் திருமணம் செய்துக் கொள்ள போவதாகவும் பல வதந்திகள் பரவின. அதற்கேற்ப இருவரும் அனைத்து பொது விழாக்களிலும் ஜோடியாகவே கலந்து கொண்டனர். மேலும் அனுஷ்கா - பிரபாஸ் இருவரும் தங்கள் திருமணம் குறித்த கேள்விகளுக்கு மறுப்பு தெரிவித்து வந்தனர். இதற்கிடையில் முதல்முறையாக நடிகர் பிரபாஸ் தனது திருமணம் குறித்த கேள்விக்கு சற்று கோபத்துடன் பதில் அளித்துள்ளார்.
சமீபத்தில் ஒரு பொது விழாவில் கலந்து கொண்ட நடிகர் பிரபாஸ் தனது திருமணம் குறித்து எழுந்த கேள்விக்கு, “இப்படிக் கேட்பதை நான் மிகவும் வெறுக்கிறேன். தொடர்ந்து இதுபோல் கேள்வி கேட்டு என்னை அசவுகரியமான நிலைக்கு ஆளாக்காதீர்கள். திருமணம் என்பது எனது சொந்த வாழ்க்கை. அது எப்போது நடக்கிறதோ அப்போது நானே அதை வெளிப்படையாக அறிவிப்பேன்” என்று கோபத்துடன் பதில் அளித்தார். தற்போது பிரபாஸ் நடித்துக் கொண்டிருக்கும் ‘சகோ’ படத்திலும் முதலில் அனுஷ்கா நடிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. அதன் பின்பு இந்தி நடிகை ஷ்ரத்தா கபூர் ஒப்பந்தமானது குறிப்பிடத்தக்கது.