Published : 03,Oct 2017 11:10 AM
திருப்பதியில் தமிழக முதல்வர் பழனிசாமி சாமி தரிசனம்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் நேற்று மாலை திருப்பதி திருமலைக்கு வந்தார். அங்கு வராக சுவாமி, ஹயக்ரீவர் கோயியில் சுவாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து நேற்றிரவு திருப்பதியில் தங்கிய முதலமைச்சர், இன்று காலை ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற வாராந்திர சேவையான அஷ்டதளபாத பத்ம ஆராதனை சேவையில் பங்கேற்று குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
தமிழக முதலமைச்சர் வருகையையொட்டி, திருப்பதியில் கடந்த 2 நாட்களாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.