Published : 17,Mar 2023 09:55 AM

“என் மகன் தவறு செய்யலை” - பிரதமர் குறித்து அவதூறு மெயில் அனுப்பியதாக சொல்லப்படுபவரின் தாய்

Mother-of-man-arrested-for-sending-slanderous-email-about-Prime-Minister-says-her-son-is-innocent

“என் மகன் எந்த ஒரு தவறும் செய்யாத நிலையில், அதிகாரிகள் அவனை அழைத்து சென்று விட்டனர்” என பிரதமர் அலுவலகத்துக்கு பிரதமர் பற்றி அவதூறு இமெயில் அனுப்பியவரின் பெற்றோர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அடுத்த பூண்டி என்ற பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். அவரது மகன் விக்டர் ஜேம்ஸ் ராஜா. இவர் தனியார் கல்லூரியில் பிஎச்டி படித்து வருகிறார். இவர் தனது தந்தையின் மெயிலில் இருந்து பிரதமர் பற்றி அவதூறு கருத்துக்களை டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

image

இந்நிலையில், விக்டர் ஜேம்ஸ் ராஜா கடந்த புதன்கிழமை (மார்ச் 15) வீட்டில் தூங்கி கொண்டிருந்த நிலையில், அவர் வீட்டிற்கு சென்ற பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் விக்டரிடம் அரை மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது வீட்டில் இருந்த அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு அவர்கள் விசாரணை செய்ததாக சொல்லப்படுகிறது.

இதுதொடர்பாக அவரது பெற்றோர் கூறுகையில், “விசாரணைக்கு பிறகு எங்களிடம் எந்த ஒரு தகவலும் கொடுக்காமல் எனது மகனை அழைத்துச் சென்று விட்டனர். எதற்காக அழைத்துச் செல்கிறோம், ஏன் அழைத்து செல்கிறோம் என்ற கேள்விக்குக்கூட முறையாக பதில் அளிக்கவில்லை. இந்த பிரச்னை குறித்து எங்கள் மகனிடம் நாங்கள் கேட்டபோது, தான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை, பயப்பட வேண்டாம் என மட்டுமே எங்களிடம் அவர் கூறினார். எங்களது மகனை மீட்டு தர வேண்டும்” என கோரிக்கை வைத்தனர்.

image

டெல்லியில் இருந்து வந்த அதிகாரிகள் விக்டரிடம் நேற்று இரண்டாவது நாளாக விசாரணை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்