Published : 29,Sep 2017 04:18 PM

ஒரே கிராமத்தில் 150 பேருக்கு காய்ச்சல்: அரசு கண்டு கொள்ளவில்லை என புகார்

thiruvallur-district-fiver

ஒரே கிராமத்தில் 150 பேர் காய்ச்சலால் அவதிப்படுவதாகவும் முறையான சிகிச்சையின்றி தவிப்பதாகவும் பலமுறை புகார் அளித்தும் அரசு கண்டு கொள்ளவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளனர். 

திருவள்ளூர் மாவட்டம் கொடிப்பள்ளம் கிராமத்திலுள்ள 150 பேர் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் அவர்கள், காய்ச்சலுக்கு மருந்து வாங்குவதற்காக நாள்தோறும் மருத்துவமனைக்கு செல்வதே தங்கள் வாடிக்கைவிட்டதாக குற்றம் சுமத்தியுள்ளனர். குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் அடுத்தடுத்து காய்ச்சல் வருவதால் வெளி வேலையைக்கு செல்ல முடியாமல், வீட்டிலுள்ளவர்களையும் கவனிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முறையாக மருத்துவ முகாம் அமைக்கப்பட வேண்டும் என்றும் காய்ச்சல் குணமாகும் வரை கொடிப்பள்ளம் கிராமத்தில் நிலையான மருத்துவ முகாம் அமைத்து ரத்தப் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்து தரவேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்