Published : 15,Feb 2023 01:50 PM

தாயும் மகளும் உயிரோடு எரிக்கப்பட்ட கொடூரம் - கொலையா? தற்கொலையா என விசாரணை

Mother-and-daughter-burnt-alive-in-Kanpur

கான்பூரில் தாயும் மகளும் உயிரோடு எரிக்கப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. வருவாய்த்துறை அதிகாரிகள் உட்பட 39 பேர் மீது கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கான்பூரில் உள்ள தேஹாத் கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது ஒரு தாயும் அவரது மகளும் உயிருடன் எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 44 வயதான தாய் மற்றும் அவரது 21 வயது மகள் ஆகியோர் வீட்டோடு எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பெண்களும் தங்களைத் தாங்களே தீயிட்டுக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்கள் உள்ளே இருந்தபோது, குடிசைக்கு தீ வைத்தது காவல்துறையினர் தான் என்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தார் குற்றம் சாட்டியுள்ளனர்.

தகவலின்படி, கடந்த திங்கட்கிழமை மாலை மாவட்டத்தின் ரூரா பகுதியில் உள்ள மடவுலி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு காவல்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய் அதிகாரிகள் அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் தங்களுக்கு முன் அறிவிப்பு எதுவும் வழங்கப்படவில்லை என்றும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

image

இதையடுத்து அப்பகுதி மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. ஒரு கட்டத்தில் பிரமிளா தீட்சித் என்ற பெண்ணும் அவரது மகள் நேஹாவும் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையில், குடிசை எரிவதற்கு முன்பு இருவரும் வீட்டின் கதவைத் தாழிட்டு உள்ளே செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இருவரும் தங்களுக்குத்தானே வீட்டை தாழிட்டு தீவைத்துக் கொண்டனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறதாக தெரிவித்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்