Published : 29,Jan 2023 09:10 PM

உலகை நடுங்க வைத்த ஹிட்லரின் ’ஆஷ்விட்ஸ்-பிர்கெனாவ்’ வதை முகாம் - அங்கு என்னதான் நடந்தது?

auschwitz-home-germany

ஆஷ்விட்ஸ்-பிர்கெனாவ் என்பது ஜெர்மனியில் உள்ள ஒரு வதை முகாம் ஆகும். இரண்டாம் உலகப்போரின் போது, ஹிட்லரின் நாசிக் படை, மில்லியன் மக்களை கைதிகளாக்கி அவர்களின் உயிரை பறித்த ஒரு இடம் தான் இந்த ஆஷ்விட்ஸ் பிர்கெனாவ் வதைமுகாம். இங்கு அப்படி என்ன தான் நடந்தது? என்று பார்க்கலாம்.

ஆஷ்விட்ஸ்-பிர்கெனாவ் முகாம் ஜெர்மனி கைப்பற்றிய தெற்கு போலந்தில் அவுஸ்விட்ச் (ஒஸ்வியேச்சிம்) என்ற நகரருகில் அமைந்திருந்தது. இது நாஜி வதை, அழிப்பு முகாம்களில் மிகப்பெரியது. இம்முகாம் மூன்று முக்கிய பிரிவுகளைக் கொண்டிருந்தது.

முதலாவது, அவுஷ்விட்ஸ் I, இது நிர்வாக மையம்;

இரண்டாவது, அவுஷ்விட்ஸ் II (பிர்க்கெனாவு), கொலை முகாம்;

மூன்றாவதாக, அவுஷ்விட்ஸ் III (மொனோவிட்ஸ்), தொழில் முகாம்.

மேலும் கிட்டத்தட்ட 40 சிறு முகாம்கள் இம்முகாமைச் சுற்றி 10 கிமீ வட்டாரத்தில் இருந்தன. இந்த முகாமை மேற்பார்வை செய்தவர், ஹிட்லரின் நன்மதிப்பு பெற்ற ருடொல்ஃப் ஹப் (Rudolf Hob)என்பவர்.

image

கம்யூனிஸ்டுகள் முதல் அரசியல் அதிருப்தியாளர்கள் வரை - சிறையில் அலைமோதிய கூட்டம்!

இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற சமயம் நாசிக் கட்சியின் தலைவரான ஹிட்லர் ஜெர்மனியின் தலைவராக இருந்தார். அவர் அகதிகளுக்காக ஏற்படுத்தியது தான்ஆஷ்விட்ஸ்-பிர்கெனாவ் முகாம். ஆனால், இங்கு அகதிகளும் கைதிகளும் மிகக் கொடூரமான துன்பத்தை அனுபவித்தனர். உலகப்போரில் கைதான ரஷ்ய போர் கைதிகள், குழந்தைகள் முதியவர்கள், பெண்கள், யூதர்கள், கம்யூனிஸ்டுகள், சிலாவ் இனத்தவர்கள், நாடோடிகள், அரசியல் அதிருப்தியாளர்கள் என்று பலரும் இம்முகாமில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டனர்.

இதை தவிர, ஐரோப்பாவின் பல நாடுகளிலும் இருந்து கைது செய்யப்பட்ட யூதர்கள் பேருந்துகளிலும் வேறு வாகனங்களிலும் திணிக்கப்பட்டும் கூட்டம் கூட்டமாகவும், மிகக் கடுமையான நெரிசலில் கொண்டுவரப்பட்டு இங்கு அடைக்கப்பட்டனர். இதில் உழைக்கக்கூடியவர்கள், உழைக்க முடியாதவர்கள், மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பயன்படக்கூடியவர்கள் என்று பல தேர்வு நடக்கும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் நாசிக் கட்சியில் இணைக்கப்பட்டு ரஷ்யாவிற்கு எதிராக போரிட பயிற்சி அளிக்கப்பட்டது, போர்முனையில் உடல் உறுப்புகளை இழந்த நாசிக் படையினருக்கு மாற்று உறுப்புகளை பெற சில கைதிகள் பயன்பட்டதாகவும் சொல்லப்போனால் அது ஒரு மனித(மிருக)காட்சி வளாகமாகத் தான் காட்சியளித்தது என்றும் கூறுகிறார்கள். இந்த திடுக்கிடும் தகவல்களை ருடொல்ஃப் ஹஸ் நுரம்பர்க் பின்னர் நடைபெற்ற  விசாரணைகளில் தெரிவித்திருந்தார்.

முகாமில் இருந்த மக்கள் விலங்குகளை விட மிக மோசமாக நடத்தப்பட்டனர் என்றும், இந்த வதை முகாமில் கிட்டத்தட்ட பல மில்லியன் மக்கள் கைதியாக இருந்ததில், சுமார் 3 மில்லியன் மக்கள் ருடொல்ஃப் ஹஸ் மேற்பார்வையில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் நடந்த விசாரணையில் இவர் இவ்வெண்ணிக்கையை பின்னர் 1.1 மில்லியன் எனக் கூறியிருந்தார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

image

நச்சுவாயு செலுத்தி கொலை!

இப்போரில் ஜெர்மனி கொஞ்சம் கொஞ்சமாக தோல்வியை எதிர்கொண்ட சமயம், முகாம்களில் இருந்தவர்களை நாசிக் படையினர் மிகக்கொடூரமாகக் கொன்று குவித்துள்ளனர். முகாமில் இருந்த குழந்தைகளை அதன் தாய்களிடமிருந்து பிரித்து, அங்கிருந்த வயதான பெண்களுடன் சேர்த்து, சைக்ளோன்-பி என்ற நச்சு வாயு பரவிய அறைகளில் அடைக்கப்படுக் கொலை செய்யப்பட்டார்கள். மேலும், பலர் கடும் உழைப்பு, ஊட்டச் சத்து இல்லாத உணவு, சுத்தமின்மை, பட்டினி, தொற்று நோய், தனிப்பட்ட மரண தண்டனைகள், மருத்துவப் சோதனைகள் போன்ற பல காரணிகளால் இறந்தனர் என்றும் தளங்கள் விவரிக்கின்றன.

சோவியத்தின் செம்படையால் கிடைத்த விடுதலை

நவம்பர் 1944 இல் சோவியத் படைகள் முன்னேறி வந்துகொண்டிருந்தபோது அவர்களிடமிருந்து தங்கள் குற்றங்களை மறைக்க நாசிகள் பிர்க்கெனாவு நச்சுவாயு அறைகளைக் குண்டு வைத்துத் தகர்த்தார்கள். 1945 ஜனவரியில் நாசிகள் அந்த முகாம்களைக் கைவிடத் தொடங்கியிருந்தார்கள். ஜனவரி 27, 1945 இல் கிட்டத்தட்ட 7,500 கைதிகளைச் சோவியத் செம்படையினர் மீட்டார்கள். மே 7, 1945 இல் ஜெர்மனி சரணடைந்தது. நுரம்பர்க் விசாரணை தொடங்குவதற்கு முன் ஹிட்லர் தன் கைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுதக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்று பதிவேடுகள் கூறுகின்றன. அவரோடு அவர் மனைவி இவா பிரானும் தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகின்றது. முகாம் ஜனவரி 27, 1945 இல் சோவியத் படைகளால் விடுவிக்கப்பட்டது,  

image

இன்றுஹோலோகாஸ்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நினைவுச்சின்னம் மற்றும் அருங்காட்சியமாக அது செயல்பட்டு வருகிறது.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்