Published : 30,Dec 2022 08:32 PM
‘ஆரம்பிக்கலாமா...’ அஜித்தின் ‘துணிவு’ படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் எப்போது? - வெளியான தகவல்

அஜித்தின் ‘துணிவு’ படத்தில் நடித்துள்ள நடிகர்கள், நடிகைகளின் கதாபாத்திரங்கள் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்த அப்டேட்டாக ட்ரெயிலர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
8 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யின் ‘வாரிசு’ படத்துடன், அஜித்தின் ‘துணிவு’ திரைப்படம் பொங்கல் பண்டிகை தினத்தில் வெளியாகிறது. ‘வாரிசு’ படம் ஜனவரி 12-ம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டநிலையில், ‘துணிவு’ படம் எந்த தேதியில் வெளியாகிறது என்று இதுவரை சர்ப்ரைஸாகவே இருந்து வருகிறது. இதற்கிடையில் விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் அவரது ரசிகர்களை உற்சாகத்தில் அழ்த்தியுள்ள நிலையில், அஜித்தின் ‘துணிவு’ படத்தின் எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது அவரது ரசிகர்களை சற்றே ஏமாற்றத்தில் ஆழ்த்தி இருந்தது.
இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் ‘துணிவு’ படத்திலிருந்து ‘சில்லா சில்லா’, ‘காசேதான் கடவுளடா’, ‘கேங்ஸ்டா’ உள்ளிட்டப் பாடல்கள் வெளியானது ரசிக்ர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கிடையில், இன்று காலை முதல் ‘துணிவு’ படத்தில் நடித்துள்ள நடிகர்கள், நடிகைகளின் கதாபாத்திரங்கள் ட்விட்டரில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டு வந்தது. அதன்படி, மோகன் சுந்தரம் மாய் பா என்ற கதாபாத்திரத்திலும், பிரேம் பிரேமாகவும், பக்ஸ் ராஜேஷ் ஆகவும், ஜான் கொக்கன் கிரிஷ் கதாபாத்திரத்திலும், வீரா ராதா ஆகவும், ஜி.எம். சுந்தர் முத்தழகன் கதாபாத்திரத்திலும், அஜய் ராமச்சந்திரன் ஆகவும், சமுத்திரக்கனி தயாளனாகவும், மஞ்சு வாரியர் கண்மணி கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
.@ManjuWarrier4 as Kanmani. #WorldOfThunivu#ThunivuCharactersReveal#ThunivuPongal#NoGutsNoGlory#Ajithkumar#HVinoth@BoneyKapoor@ZeeStudios_@BayViewProjOffl@RedGiantMovies_@ManjuWarrier4@kalaignartv_off@NetflixIndia#RomeoPictures@mynameisraahul@SureshChandraapic.twitter.com/sW7jfFfqrf
— Zee Studios South (@zeestudiossouth) December 30, 2022
அஜித்தின் கதாபாத்திரம் மட்டும் சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ள நிலையில், நாளை மாலை 7 மணிக்கு ‘துணிவு’ படத்தின் ட்ரெயிலர் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை வெளியாகும் ட்ரெயிலரில் அஜித்தின் கதாபாத்திரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால், அஜித்தின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஏனெனில் அஜித்குமார் பெயரைப் போட்டு கேள்விக்குறி ஒன்றுடன் உள்ள புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.
Guns, guts and glory - all set to fire up in style tomorrow!
— Zee Studios South (@zeestudiossouth) December 30, 2022
Set your alarms for 7PM tomorrow, the #ThunivuTrailer is coming
Stay tuned to - https://t.co/pLyyVed06t#ThunivuPongal#NoGutsNoGlory#Ajithkumar#HVinoth@BoneyKapoor@ZeeStudios_@BayViewProjOffl@RedGiantMovies_pic.twitter.com/Vczo9W4Fwj