Published : 29,Dec 2022 08:56 AM
"தனியா இருந்தா அத்துமீறுவீங்களா?”- பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு பெண் கொடுத்த தக்க பாடம்!

பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள், துன்புறுத்தல்கள், வன்கொடுமைகள் நித்தமும் நடந்தேறி கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக கல்வி நிலையங்கள், அலுவலகங்கள், ஏன் பொதுவெளி உட்பட காணும் இடமெல்லாம் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதுப்போன்ற அத்துமீறல்களில் இருந்து தப்பிக்க சிறுமிகள் முதற்கொண்டு அனைத்து பெண்களும் ஜூடோ, கராத்தே போன்ற தற்காப்பு கலைகளை கற்றறிந்துக்கொள்வது என்றே அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
அதே வேளையில் கட்டிய மனைவியே ஆயினும் அவர்களின் கண்ணியத்திற்கு குறைவை ஏற்படுத்தும் வகையிலான செயலில் எந்த ஆணும் ஈடுபட கூடாது என்ற சொல்லிக்கொடுத்து வளர்க்க இந்த சமூகம் தொடர்ந்து தவிர்த்து வருவதன் விளைவுதான் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வன்கொடுமை சம்பவங்களுக்கு அத்தாட்சியாக இருக்கிறது.
இப்படி இருக்கையில் லிஃப்டில் தனியாக பயணித்த பெண்ணிடம் தவறாக நடந்துக்கொண்ட நபருக்கு தக்க பாடம் கற்பிக்கும் விதமாக கொடுத்த பதிலடி குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
He got what he deserved pic.twitter.com/linbzcsqio
— Lance (@BornAKang) December 27, 2022
அதன்படி, வெறும் 31 நொடிகளே கொண்ட அந்த வீடியோவில், லிஃப்டில் தனியாக இருந்த அந்த பெண்ணிடம் அத்துமீற முயற்சித்ததும், முதலில் எட்டி நின்றிருக்கிறார் அப்பெண். ஆனால் மீண்டும் அவரை அந்த நபர் பின்னால் இருந்தபடி நெருங்கவே, திரும்பி கண்ணத்தில் ஒரு அரை கொடுத்ததோடு அந்த நபரின் அந்தரங்க உறுப்பில் எட்டி உதைத்திருக்கிறார்.
இந்த நிகழ்வுகள் அனைத்தும் லிஃப்டில் இருந்த சிசிடிவியில் பதிவாகியிருக்கிறது. அந்த வீடியோதான் தற்போது 20 லட்சத்துக்கும் மேலானோரால் பார்க்கப்பட்டிருக்கிறது. இணையவாசிகள் பலரும் அந்த பெண்ணின் தைரியத்தை பாராட்டியதோடு, அந்த நபர் இந்த பதிலடிக்கு முழுக்க முழுக்க தகுதியானவர்தான் என்றும் பதிவிட்டிருக்கிறார்கள்.
Nah, every man should learn from this to keep their hands to themselves.
— Booknerd (@Booknerd1785) December 27, 2022