Published : 25,Sep 2017 07:36 AM

மாணவிகளை தாக்கிய போலீசார் இடை நீக்கம்

police-suspended-for-assaulting-students

உத்தரப்பிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவிகள் மீது தாக்குதல் நடத்திய 2 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வியாக்கிழமை பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் 2 பேர், ஒரு மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளனர். அதனையடுத்து அந்த  மாணவி மயக்கமடைந்துள்ளார். இந்த சம்பவத்தை பல்கலைக்கழகம் கண்டுகொள்ளவில்லை. இதனால் கோபமடைந்த மாணவ- மாணவிகள் பல்கலைக்கழகத்தை கண்டித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று இரவு பல்கலைக் கழக துணைவேந்தர் வீட்டை மாணவிகள் முற்றுகையிட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார், மாணவிகள் மீது தடியடி நடத்தினர். அப்போது  மாணவி ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் வழிந்த நிலையில் அந்தப் பெண் கதறும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ, மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய முதல்வர் ஆதிநாத் யோகி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதனையடுத்து, மாணவி மீது தாக்குதலை நடத்திய இரண்டு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கூடுதல் மாஜிஸ்டிரேட் ஒருவரும் பணியில் இருந்து நீக்கபட்டுள்ளார். 

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி, மாணவிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், 'பெண் குழந்தைகளை காப்போம்' என்று பாஜக அரசு செய்து வரும் பிரச்சாரத்திற்கு உதாரணம் என்று கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தையடுத்து பல்கலைக் கழகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்