Published : 30,Nov 2022 06:13 PM
'பர்த்டே ட்ரீட்' வர தாமதமானதால் ஓட்டலை நொறுக்கிய காங்கிரஸ் நிர்வாகி மகனுடனான கும்பல்!

ஒசூர் அருகே ரெஸ்டாரண்டில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி மகன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில், உணவு தர தாமதமானதால் ஊழியர்களை அடித்து நொறுக்கி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒசூர் அடுத்த கர்நாடகா மாநிலம், பெங்களூர் மாவட்டம் ஆனேக்கல் பகுதியில் வில்லேஜ் ரெஸ்டாரெண்ட் செயல்பட்டு வருகிறது. அந்த பகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராமச்சந்திரப்பாவின் மகன் தனுஷ் என்பவர், தனது நண்பர்கள் 20பேருடன் பிறந்தநாளை கொண்டாட ஓட்டலுக்கு சென்றுள்ளார்.
அப்போது ஆர்டர் கொடுத்த உணவு வழங்க தாமதமானதால், தனுஷ் மற்றும் அவரது நண்பர்கள் ஓட்டல் ஊழியர்களை தாக்கி உள்ளனர். மேலும் பெண்கள் உள்ளிட்டோரையும் தாக்கி மேஜை உள்ளிட்டவற்றிற்கு தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
படு காயமடைந்த ஓட்டல் ஊழியர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆனேக்கல் போலிசார் காங்கிரஸ் நிர்வாகி மகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.