Published : 24,Nov 2022 02:00 PM
குப்பைகளை பிரித்தெடுக்கும் தூய்மை பணியாளரான நடிகர் யோகி பாபு - ஏன் தெரியுமா?

தூய்மை பணியாளராக வீடு தோறும் சென்று தரம் பிரித்து குப்பைகளை சேகரிக்கும் காட்சியில் நடிகர் யோகி பாபு நடித்துள்ளார்.
குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக குறும்படம் தயாரிக்கப்படும் நிலையில், அதில் தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வளம் வரும் யோகி பாபுவை வைத்து குறும்படம் இயக்கப்படுகிறது.
Urbaser Sumeet நிறுவனம் மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் எடுக்கப்படும் இந்த படத்திற்காக வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிக்குக் தூய்மை பணியாளர் வேடத்தில் யோகி பாபு நடித்துள்ளார்.
பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்க வேண்டும். தூய்மையாக வைத்துக் கொள்ள மாநகராட்சி பணியாளர் உடன் பொதுமக்கள் ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என வலியுறுத்தி குறும்படம் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.