[X] Close

சோமனூர் விபத்தில் காலை இழந்த மாணவி: சிகிச்சை அளிக்க மருத்துவமனை மறுப்பு

Private-Hospital-refused-to-treatment-for-student

கோவை மாவட்டம் சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்த விபத்தில், காயமடைந்து காலை இழந்த மாணவிக்கு தனியார் மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Advertisement

சிகிச்சைக்கு ஆகும் செலவை ஏற்பதாக, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்திருந்தபோதும், தனியார் மருத்துவமனை சிகிச்சையளிக்க மறுத்துவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த மாணவி லதா, விபத்தில் காயமடைந்த முதியவரான மாரப்பன் ஆகியோரின் உறவினர்கள் மருத்துவமனை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே மாணவி லதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு 4 லட்ச ரூபாய் செலவாகியுள்ள நிலையில், அரசு சார்பில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே நிதி வழங்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தற்போது, மற்றொரு அறுவை சிகிச்சைக்கு கூடுதல் செலவாகும் என்பதால், தனியார் மருத்துவமனை சிகிச்சை அளிக்க மறுப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவை கருமத்தம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட சோமனூரில் கடந்த 7-ம் தேதி பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து 5 பேர் பலியாகினர். 16 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரும் சேதத்தை ஏற்படுத்திய இந்த விபத்துக்கு தொடர்மழையும், பராமரிப்பின்மையுமே காரணமாகக் கூறப்படுகிறது.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close