Published : 22,Sep 2017 05:09 PM

கமல்ஹாசனை முதலில் கவுன்சிலராகச் சொல்லுங்கள்: ராஜேந்திர பாலாஜி

Minister-Rajendra-Balaji-about-Kamal-Hassan

படத்தில் வேண்டுமானால் கமல்ஹாசன் முதல்வராக நடிக்கலாம். அவரை முதலில் கவுன்சிலராகச் சொல்லுங்கள் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

தமிழகத்தில் இன்னும் நூறு நாட்களில் தேர்தல் வந்தால் அதை தாம் தனியாகவே சந்திக்கப் போவதாக நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்தார். மேலும், தமிழகத்தில் தற்போதுள்ள அரசு கட்டாய கல்யாணம் போன்றது என்று விமர்சித்த கமல்ஹாசன் தமிழக மக்கள் அதிலிருந்து வெளியேற விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, " கோடிக்கணக்கான பணம் போட்டு, ஒரு படம் எடுத்து அதில் வேண்டுமானல் கமல்ஹாசன் முதலமைச்சராக நடிக்கலாம். முதலில் கவுன்சிலராக வரச் சொல்லுங்கள்" என்றார். அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசும்போது, " பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்தார்கள். அந்த கட்சிகள் எல்லாம் இப்போது இல்லாமல் கூட போய்விட்டது. எனவே கமல்ஹாசன் மூலம் தாக்கம் வராது" என்றார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்